கரூரில் நடந்த கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டவர்கள் குறித்த தகவல்களை காவல்துறை சேகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கரூரில் தவெக பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரச்சாரத்தில் சதிவேலை நடந்துள்ளதாக தவெக நீதிமன்றத்தை நாடியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தை சிலர் சமூக வலைதளங்களில் அரசியலாக்குவதாகவும், வீண் வதந்திகளை, அவதூறுகளை பரப்புவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதை தொடர்ந்து தற்போது, கரூர் பிரச்சார வீடியோக்களை ஷேர் செய்த சமூக வலைதள கணக்குகளை போலீஸார் சேகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கரூர் துயரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளுடன் வீடியோ வெளியாகி வரும் நிலையில், வீடியோ ஷேர் செய்தவர்களை தேவைப்பட்டால் விசாரிக்கவும் போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K