கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் கண்ணன். வழக்கறிஞரான இவர் ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த நிலையில், திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால், படுகாயம் அடைந்த கண்ணன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
இது குறித்த தகவல் அறிந்த போலீசார், அரிவாளால் வெட்டியவரை தேடி வருவதாகவும், முதல் கட்ட விசாரணையில் அரிவாளால் வெட்டியவர் பயிற்சி வழக்கறிஞர் ஆனந்தன் என்றும் கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக வழக்கறிஞரை அரிவாளால் வெட்டியதாகவும், இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இன்று காலை, ரமணி என்ற ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்திய நிலையில், தற்போது வழக்கறிஞர் ஒருவர் வெட்டப்பட்ட சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.