மறைந்த ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்படவுள்ள கட்டமைப்பின் மாதிரி தோற்றம்!!

புதன், 7 டிசம்பர் 2016 (14:11 IST)
தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி, சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் ஆன நிலையில், நேற்று முன் தினம் காலமானார். அவரது உடல் ராஜாஜி மஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

 
இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடம் அமையவுள்ள இடத்தின் கட்டமைப்பு வரைபடம் வெளியாகியுள்ளது. இதில் முன்புறம் மிகப்பெரிய தூண்களுடன், கிரீடம் போன்ற அமைப்பில் முகப்பு அமைக்கப்படுகிறது. உள்ளே சென்றால் இருபுறமும் பசுமையாக காட்சியளிக்கும் வகையில் புற்களால் அலங்கரிக்கப்படும்.
 
இதையடுத்து மத்தியில் இரண்டு கைகள் ஒன்று சேர்ந்திருக்கும் வகையில் பிரம்மாண்ட அமைப்பு வைக்கப்படுகிறது. சமாதி அமைந்துள்ள இடத்தில் தேவதை சிலை ஒன்றும், மேல்புறம் கிரீடம் போன்றும் உருவாக்கப்பட உள்ளது. அவருடைய சமாதியில் “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்ற வார்த்தைகள் பொறிக்கப்படும். தற்போது ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் அமைக்கபடவிருக்கும் கட்டமைப்பு வரைபடம் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்