விஜய் சேதுபதி இப்படி செய்யலாமா? : பொங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்

திங்கள், 4 ஜூலை 2016 (15:53 IST)
நடிகர் விஜய் சேதுபது “ இறைவி” படத்தில் நடித்திருந்தது பற்றி நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் கோபம் தெரிவித்துள்ளார்.


 

 
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “இறைவி”. இது பெண்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம் என்று இயக்குனர் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், படம் வெளிவந்தபின் எதிர்மறையான விமர்சனங்களும் வெளிவந்தன.
 
இன்று காலை ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் அந்த படத்தை பற்றி காரசாரமாக பேசினார். அதிலும், அந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதியை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார்.
 
அவர் கூறும்போது “பெண்களுக்கு மதிப்பளிக்கும் படம் என்று கூறிவிட்டு கடைசி ஐந்து நிமிஷம் மட்டும் அவங்களுக்கு ஆதரவா கருத்து சொன்னால் போதுமா? அதுவும் இந்த மாதிரி படங்களில் விஜய் சேதுபதி நடித்ததை சகித்துக் கொள்ளவே முடியாது. படம் முழுக்க வன்முறை. பல இளம் பெண்கள் விஜய் சேதுபதியின் ரசிகைகளாக இருக்கிறார்கள். அப்படிப்பட்டவருக்கு ஒரு சமூக பொறுப்பு வேண்டாமா? தான் என்ன கேரக்டரில் நடிக்கிறோம் என்பதை உணர்ந்து நடிக்க வேண்டாமா?” என்றெல்லாம் பொங்கிவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்