பாஜகவை விளாசி டுவீட் செய்த குஷ்பு

வியாழன், 7 செப்டம்பர் 2017 (19:11 IST)
டுவிட்டரில் மீண்டும் அடி எடுத்து வைத்துள்ள குஷ்பு அனிதா மரணம் தொடர்பாக பாஜகவை விளாசி டுவீட் செய்துள்ளார்.


 

 
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக இருக்கும் குஷ்பு கடந்த ஜூலை மாதம் டுவிட்டரில் இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் டுவிட்டர் தளத்துக்கு வந்துள்ளார்.
 
இவரின் வருகைக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் வந்தவுடனே பெங்களூரில் பெண் பத்திரிக்கையாளர் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்தும், அனிதா மரணம் குறித்தும் தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும் பாஜக அரசை விட்டு விளாசியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
பாஜகவின் காலடியில் ஜனநாயகம் கொல்லப்படும் இந்த வேளையிலும் நான் என்னுடைய கருத்தை தெரிவிக்கவில்லையென்றால் இந்தியக் குடிமகளாக இருப்பதற்கே எனக்கு அருகதை இல்லை என டுவீட் செய்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்