திருடப்பட்ட கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோயில் பார்வதி சிலை அமெரிக்காவில் உள்ளதா?

திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (08:04 IST)
திருடப்பட்ட கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோயில் பார்வதி சிலை அமெரிக்காவில் உள்ளதா?
கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோவிலில் இருந்த பார்வதி சிலை ஈடுபட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
கும்பகோணம் நடனபுரீஸ்வரர் கோவிலில் இருந்து சிலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருடப்பட்டது. இந்த சிலையை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிலை பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள போன்ஹாம்ஸ் என்ற ஏலம் விடும் நிறுவனத்தில் இந்த சிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 
 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான இந்த சிலை ஐம்பொன்னால் உருவாக்கப்பட்டது என்பதும் இந்த சிலையின் மதிப்பு 1.65 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தநிலையில் அமெரிக்காவில் உள்ள நடனபுரீஸ்வரர் சிலையை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்