என்ன தவறு செய்தார் ப.சிதம்பரம்? கே.எஸ்.அழகிரி ஆவேசம்

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (20:22 IST)
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கு ஐ.என்.எஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து அவரை வீட்டுக்கு இன்று சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அவரை கைது செய்யவே அதிகாரிகள் சென்றதாக கூறப்படும் நிலையில் ப.சிதம்பரம் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் திரும்பிவிட்டனர். 
 
ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்ற தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ப.சிதம்பரம் தலைமறைவாகிவிட்டதாக பாஜகவை சேர்ந்தவர்கள் தொலைக்காட்சி விவாதங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கூறி வருகின்றனர்,. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் கே.எஸ்.அழகிரி இதுகுறித்து ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 
என்ன தவறு செய்தார் ப.சிதம்பரம்...? பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது என்று கே.எஸ்.அழகிரி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். கடந்த பல வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது ஒருசில வழக்குகளில் ஜாமீன் பெற்ற ப.சிதம்பரம் தற்போது ஜாமின் கிடைக்காததால் கைது செய்யப்பட வாய்ப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் வந்திருப்பதாக கூறப்படும் சூழலில் கே.எஸ்.அழகிரி இவ்வாறு விமர்சனம் செய்திருப்பது நீதிமன்ற நடவடிக்கையையே விமர்சிப்பதாக அர்த்தம் என பாஜகவினர் கூறி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்