வாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி கிருஷ்ணசாமி மனு: நீதிபதி அறிவுரை

வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (11:55 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை மறுநாள் அதாவது மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளன 
 
வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் செய்து வைத்துள்ளது என்பதும், வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது கிருஷ்ணசாமி மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் அற்ப காரணங்களுக்காக இனிமேல் இதுபோன்று வழக்கு தொடர்வதை கிருஷ்ணசாமி அவர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்