குடும்பம் நடத்துறது என்கூட.. கல்யாணம் வேற பெண்ணுடனா? – இளைஞரை கத்தியால் குத்திய பெண்!

திங்கள், 16 நவம்பர் 2020 (10:26 IST)
கொடைக்கானலில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட 24 வயது இளைஞரை 42 வயது பெண் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானலில் உள்ள அன்னை தெர்சா நகரை சேர்ந்தவர் பிரதீப். டிரைவராக பணிபுரிந்து வரும் இவர் வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் 42 வயது பெண்மணி பிரமிளா. இவரது கணவர் ராஜேஷ் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார் பிரமிளா.

இந்நிலையில் பிரமிளாவுக்கும், டிரைவர் ப்ரதீப்பிற்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஒரே வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமலே இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. இது பிரதீப்பின் பெற்றோருக்கு தெரிய வர அவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த பிரமிளா, பிரதீப்புடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பிரமிளா, பிரதீப்பை கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயமுற்ற பிரதீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரமிளாவை கைது செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்