தமிழகம் வருகிறார் அமித்ஷா: பீகாருக்கு அடுத்த குறி தமிழகமா?

ஞாயிறு, 15 நவம்பர் 2020 (12:58 IST)
பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் சரி, மாநில சட்டமன்றத் தேர்தலிலும் சரி பாஜகவின் வெற்றிக்கு அமித்ஷாவின் அரசியல் தந்திரம் தான் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் பீகார் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துவிட்ட பாஜக அடுத்ததாக தமிழகத்தை குறி வைத்துள்ளது 
 
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து இதுவரை தமிழகத்தில் ஒரு எம்எல்ஏ பதவியை கூட பிடிக்காத பாஜக முதல் முறையாக அதிக இடங்களில் போட்டியிட்டு அதிக இடங்களை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது 
 
இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை செய்வதற்காக நவம்பர் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
பாஜக தமிழக தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை செய்வார் என்றும் இந்த ஆலோசனையில் குஷ்புவும் இருப்பார் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜக தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அமித்ஷா தமிழக தலைவர்களுடன் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது 
 
மற்ற மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது போல் தமிழகத்திலும் பாஜக தனது வெற்றியை தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்