இன்ஸ்டாகிராமில் காதல்: காதலை ஏற்க மறுத்ததால் கத்திக்குத்து!

செவ்வாய், 12 ஜூலை 2022 (13:54 IST)
இன்ஸ்டாகிராமில் நட்புடன் பழகி அதன் பின் காதலிக்குமாறு வற்புறுத்தி நிலையில் இளம்பெண் காதலிக்க மறுத்ததால் இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கோவையை சேர்ந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவருடன் அறிமுகமாகி நட்புடன் பழகி வந்தார். திடீரென அந்த இளம் பெண்ணை காதலிப்பதாக தினேஷ் கூறினார்
 
ஆனால் அவரது காதலை இளம்பெண் ஏற்க மறுத்ததை அடுத்து இன்ஸ்டாகிராமில் பேசுவதையும் நிறுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் இளம்பெண் பணிபுரியும் அலுவலகத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளார்
 
அந்த இளம்பெண் தற்போது படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தினேஷை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்