வட இந்தியர்களால் சென்னைக்கு ஆபத்து.. அமைச்சர் கே.என்.நேரு

வியாழன், 26 ஜனவரி 2023 (11:43 IST)
வட இந்தியாவிலிருந்து சென்னைக்கு வரும் வட இந்தியர்களால் சென்னைக்கு ஆபத்து என அமைச்சர் கேஎன் நேரு கருத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
வட மாநிலங்களில் வேலை வாய்ப்பு இல்லாததால் தினமும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் சென்னையில் தினமும் 1000 முதல் 2000 குடும்பங்கள் குடியேறி கொண்டிருப்பதால் பெரிய ஆபத்து காத்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
அவர்கள் நிச்சயம் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் எனவே அதை முறியடிக்க வேண்டிய நிலை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
சென்னைக்கு தினமும் வந்து குடியேறும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்களால் சென்னை உள்பட தமிழகம் முழுவதற்கு ஆபத்து என அமைச்சர் கே என் நேரு தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே தமிழகத்தில் தங்கி இருக்கும் வட இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்