திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா நத்தம் கிராமத்தில் முதுநிலை பட்டதாரி வாலிபர் வெங்கட முணி என்பவர் விவசாய வேலை செய்து வந்துள்ளார். திடீரென்று அந்த கிராமத்திற்கு சொகுசு காரில் பட்டாக்கத்திகளுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், வெங்கட முனியை கத்தி முனையில் கடத்தி சென்றனர்.
தடுக்கச் சென்ற அவரது உறவினர்கள், நண்பர்களை வெட்டி விடுவதாக மர்ம கும்பல் மிரட்டி விட்டு சென்றுள்ளது. தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் வாலிபரை கடத்திச் சென்றது யார் என்பது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.