பீட்டாவை டுவிட்டரில் விளாசிய குஷ்பூ: வாலண்டியராக வந்து சிக்கியது!

வெள்ளி, 13 ஜனவரி 2017 (19:57 IST)
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது, ஜல்லிக்கட்டின் போது மாடுகள் துன்புறுத்தப்படுகிறது என நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவை பெற்றுள்ளது பீட்டா என்ற அமைப்பு. இதனையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.


 
 
ஆனால் இந்த முறை இளைஞர்கள், மாணவர்கள் உள்பட மக்கள் போராட்டம் வெடித்து தடையை மீறி நாங்கள் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என களம் இறங்கியுள்ளனர் தமிழர்கள். பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்புவும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கி வருகிறார்.
 
இந்நிலையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் உள்ளது. இதெல்லாம் பீட்டா அமைப்பின் கண்ணுக்கு தெரியாதா என கேள்வியெழுப்பினார்.
 
இதனையடுத்து பீட்டா அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து நடிகை குஷ்புவின் டுவிட்டுக்கு பதில் அளித்தது. அதில் ஜல்லிகட்டில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன. அது சட்டத்துக்கு விரோதமானது என பதிலளித்தது.
 
இதனையடுத்து நடிகை குஷ்பு சரமாரியாக பீட்டாவை விளாசினார். நீங்கள் ஜல்லிக்கட்டில் உள்ள தவறுகளை மட்டும் பார்க்கீறீர்கள் அதன் மறுபக்கத்தில் உள்ள பல நன்மைகளை பார்க்கவில்லை. ஜல்லிக்கட்டை தடை செய்ய நீங்கள் ஐந்து காரணங்களை காட்டினால், நாங்கள் அதை ஆதரிப்பதற்கு ஐம்பதாயிரம் காரணங்களை காட்ட முடியும். இதனையடுத்து ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்டும் பீட்டாவும் விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்