சசிகலாவுக்கு பைத்தியம் முற்றிவிட்டது: முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிசாமி!

வியாழன், 1 ஜூலை 2021 (19:44 IST)
எம்ஜிஆரே என்னிடம் தான் அரசியல் ஆலோசனை கேட்பார் என்று சசிகலா சற்றுமுன் ஆடிய ஒன்றில் கூறியுள்ளதை அடுத்து அவருக்கு பைத்தியம் முற்றி விட்டது என்று முன்னாள் அதிமுக எம்பி கேசி பழனிச்சாமி கூறியுள்ளார் 
 
ஊடகமொன்றுக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்த கேசி பழனிச்சாமி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆவதற்கு கூட சசிகலாவுக்கு தகுதி இல்லை என்பது இந்த ஆடியோ மூலம் தெரிய வருகிறது என்றும் எம்ஜிஆரை அவர் பார்த்திருப்பாரா என்பதே சந்தேகம் என்றும் கூறினார் 
 
மேலும் சசிகலா அவர்கள் ஜெயலலிதாவுக்கு பணிப்பெண்ணாக தான் வந்தார் என்றும் அதன் பின்னர் தான் அவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் எம்ஜிஆருக்கு ஆலோசனை சொன்னேன் என்று கூறி இருப்பது மிகப்பெரிய பொய் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் சசிகலா இது போன்ற தவறான தகவலை கூறி அதிமுக தொண்டர்களை குழப்பக் கூடாது என்றும் அதிமுக தொண்டர்கள் இதை நம்புவதற்கு முட்டாள்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்தார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்