வீட்டைப் பாதுகாக்கும் பணியில் கரூர் பஞ்சப்பட்டி அழகுராஜ் (35), வீரராக்கியம் கந்தசாமி (60), திம்மாச்சிபுரம் சாமிநாதன் (30) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் 3 ம் தேதி அதிகாலையில் வேனில் வந்த முகமூடி அணிந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென சாமியப்பனின் வீட்டின் முன் நின்றிருந்த காவலாளிகள் மூவரையும் தாக்கி, வேனில் கடத்திச்சென்று ரூ. 50 கோடி கேட்டு சாமியப்பனுக்கு மிரட்டல் விடுத்தனர்.
இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நான்கு மணி நேரத்தில் குற்றவாளிகளான திண்டுக்கல்லைச் சேர்ந்த ராஜா (29), அன்பரசு (22), தேனியைச் சேர்ந்த விஜயரகுநாதன் (29), அருண்(27) ஆகிய 4 பேரை கைது செய்து காவலாளிகள் 3 பேரையும் மீட்டனர்.