இத்தனை நாளா வரல்ல, இப்ப மட்டும் வந்திருக்கீங்களே..!' - ஜோதிமணியிடம் கேள்வியெழுப்பிய பெண்

Mahendran

வெள்ளி, 29 மார்ச் 2024 (10:17 IST)
கடந்த முறை எம்பி ஆக தேர்வு செய்யப்பட்ட பின்னர் இத்தனை நாளாக எங்களை பார்க்க வரவில்லை, இப்போது மட்டும் ஏன் வந்தீர்கள் என கரூர் எம்பி ஜோதிமணியை அந்த பகுதி மக்கள் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணி போட்டியிட இருக்கும் நிலையில் அவர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கோடங்கிபட்டி பாட்டாளி அம்மன் கோவில் அருகே தனது பிரச்சாரத்தை தொடங்கிய போது அந்த பகுதியில் உள்ள பெண் ஒருவர் ’ஐந்து வருடங்களாக உங்களை பார்க்கவில்லை, நீங்கள் இங்கே வரவே இல்லை, இப்போது ஓட்டு கேட்க மட்டும் வந்திருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினார் 
 
இதை சற்றும் எதிர்பாராத ஜோதிமணி ’அமைதியாக இருங்கள், கண்டிப்பாக இனிமேல் வருவேன், உங்கள் குறைகளை எல்லாம் சொல்லுங்கள், பேசிக்கொள்ளலாம்’ என்று கூறினார் 
 
முதல் நாள் பிரச்சாரத்திலேயே ஜோதிமணியிடம் பெண் ஒருவர் கேள்வி எழுப்புவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வடசென்னை தொகுதியில் கலாநிதி வீராசாமி ஓட்டு கேட்க செய்தபோது சென்ற போதும் இதே போன்ற கேள்விகள் பொதுமக்களால் எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்