ஓராண்டிற்கு பிறகு அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதி திடீர் விசிட்!!

வெள்ளி, 15 டிசம்பர் 2017 (22:09 IST)
திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஓராண்டு காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால், இதனால் கட்சி பணிகளில் நேரடியாக ஈடுபடுவது, விழாக்களில் பங்கேற்பது ஆகியவற்றை நிறுத்திக் கொண்டார்.
 
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு கருணாநிதி வந்தார். அவருடன் செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன் மற்றும் ஆ.ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
 
சுமார் 20 நிமிடம் அறிவாலயத்தை பார்வையிட்ட அவர், கோபாலபுரம் இல்லத்திற்கு திரும்பினார். கட்சி தலைமை அலுவலகத்திற்கு கருணாநிதி வந்ததால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்