திமுக தலைவர் கருணாநிதி, திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் கடந்த 1924 ஆம் ஆண்டு ஜூன் மதம் 3ஆம் தேதி பிறந்தார். அவருக்கு 92 வயது முடிந்து, இன்று 93 வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனையடுத்து, அவரது வீட்டில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அப்போது, அவருக்கு அவரது மனைவி, மகன் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி உள்ளிட்டவர்கள் உடன் இருந்து வாழ்த்து தெரிவித்தனர்.
அதே போல, பிரபல அரசியல் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.