இன்று - சட்டசபைக்கு கருணாநிதி வருவாரா?

புதன், 25 மே 2016 (09:29 IST)
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்எல்ஏக்களாக இன்று பதவியேற்கும்  நிகழ்ச்சிக்கு திமுக தலைவரு கருணாநிதி வருகை தருவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
 

 
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதனையடுத்து, கடந்த 23 ஆம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், ஜெயலலிதா  முதல்வராகவும், அவருடன் 28 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டார். அத்துடன், சட்டசபை தற்காலிக சபாநாயகராக செம்மலை நியமிக்கப்பட்டார்.
 
மேலும், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களாக இன்று காலை 11 மணிக்கு சட்டசபைக்கு வந்து பதவியேற்கிறார்கள். இதில், அதிமுக மற்றும் அதன் கூட்டணிக்கட்சி எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்.
 
இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதி இன்று சட்டசபைக்கு வந்து பதவியேற்பாரா அல்லது வேறு ஒரு நாளில் வந்து பதவியேற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை. அது குறித்த தகவலும் வெளியாகவில்லை.
 

வெப்துனியாவைப் படிக்கவும்