இந்த நிலையில் கருணாநிதியுடன் மருத்துவமனைக்கு சென்ற அவரது குடும்பத்தினர்களாகிய மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், கனிமொழி, ஆகியோர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. இருப்பினும் கருணாநிதி தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ. வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர்களும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டனர். மேலும் கருணாநிதி அவர்களின் தனி மருத்துவர் கோபால் அவர்களும் காவேரி மருத்துவமனையில் இருந்து கிளம்பி விட்டார் என்பது தெரிய வந்துள்ளது.