சீன விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின்

Mahendran

வியாழன், 6 ஜூன் 2024 (11:30 IST)
சீன விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் அளித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சீன விசா முறைகேடு வழக்கு அமலாக்கத்துறையால் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் ஜாமின் கோரி கார்த்திக் சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கி, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
பஞ்சாப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக, சீனர்களுக்கு விசா வழங்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. கடந்த 2022 மே மாதத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்த நிலையில், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்தது.
 
இந்த வழக்கு விசாரணைக்காக, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான கார்த்தி சிதம்பரத்திற்கு தற்போது ஜாமின் கிடைத்துள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்