ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பும் உத்தரவிற்கு தடை கோரி தீபா, தீபக் மனு அளித்த நிலையில் இந்த மனு ஏற்கப்பட்டு ஜெயலலிதாவின் நகைகளை தமிழ்நாட்டிற்கு அனுப்பும் உத்தரவுக்கு தடை விதித்து கர்நாடகா ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவின் அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழக உள்துறை செயலாளர் நேரில் வந்து பெற்றுக் கொள்ள என என பெங்களூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்து இருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோர் கர்நாடகா ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
முன்னதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் முன்னாள் நிரந்தர பொதுசெயலாளருமான ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்டோர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடந்து வந்த நிலையில் 2015ல் சிறை தண்டனை விதித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணையில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்கள் கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.