கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு: வயநாடு குறித்து விளக்கம் அளித்த தேர்தல் ஆணையர்..

புதன், 29 மார்ச் 2023 (12:52 IST)
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் தேர்தல் ஆணையர் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்திற்கு மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக 224 தொகுதிகளுக்கும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அன்றைய தினம் பதிவான வாக்குகள் மே 13ஆம் தேதி எண்ணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் வயநாடு தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவில்லை என்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்டு ஒரு தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்டு  ஆறு மாதங்கள் வரை தேர்தல் தேதி அறிவிக்க சட்டத்தில் இடம் உள்ளது என்றும் நீதிமன்ற நடவடிக்கையின் முடிவுக்காகவும் காத்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
இந்த நிலையில் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்