இதுதான் திராவிடம்! திராவிடத்தால் வீழவில்லை. திராவிடத்தால் வாழ்ந்தோம். கனிமொழி டுவீட்

செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (19:15 IST)
நாடு முழுவதும் பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை வேண்டும் என்ற 2005 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு அளித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த தீர்ப்பில் இந்து கூட்டு குடும்பத்தில் ஆண் பிள்ளைகளுக்கு சமமாக சொத்துக்களை பகிர்ந்து கொடுப்பது போல் பெண் பிள்ளைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
 
இந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது: ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கே முன்னோடியாக 30 ஆண்டுகளுக்கு முன்னர் தலைவர் கலைஞர் பிறப்பித்த பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்ற சட்டத்தை இன்று உச்சநீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இதுதான் திராவிடம் !  திராவிடத்தால் வீழவில்லை. திராவிடத்தால் வாழ்ந்தோம். என்று பதிவு செய்துள்ளார்.
 
தமிழகத்தில் கடந்த 1989ஆம் ஆண்டு பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டம் கொண்டுவரப்பட்டு கடந்த பல ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் தற்போது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் நாடு முழுவதும் இந்த சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்