மறைந்த விஜயகாந்தின் நினைவிடத்தில், அரசியல் பிரமுகர்களும், திரைத்துறையினரும், தேமுதிக தொண்டர்களும், பொதுமக்களும் என ஏராளமானோர் நாள்தோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அவரது தாயார் திருமதி.ராஜாத்தி அம்மாள் ஆகியோர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்றனர். அங்கு விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய அவர்கள், திருமதி.பிரேமலதா விஜயகாந்த்திற்கு ஆறுதலும் தெரிவித்தனர்.