திமுகவில் கனிமொழி எம்பிக்கு கூடுதல் பொறுப்பு: அதிரடி அறிவிப்பு

புதன், 28 டிசம்பர் 2022 (13:56 IST)
திமுகவில் கனிமொழி எம்பிக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
திமுகவின் மக்களவை உறுப்பினராக இருக்கும் கனிமொழி சமீபத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவியை ஏற்றார் என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் திமுகவில் உள்ள 22 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐ.பெரியசாமி, கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா உள்ளிட்ட துணைப்பொதுச்செயலாளர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
 
இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்பட 5 அணிகளுக்கு ஐ.பெரியசாமி பொறுப்பாளர் என்றும், மகளிர் அணி, தொண்டரணி உள்ளிட்ட 5 அணிகளுக்கு கனிமொழி பொறுப்பாளர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்