இல்லத்தரசிகளுக்கு ஊதியம்: கமலின் அறிவிப்புக்கு பதிலடி கொடுத்த கனிமொழி எம்பி!

செவ்வாய், 22 டிசம்பர் 2020 (21:09 IST)
கமலின் அறிவிப்புக்கு பதிலடி கொடுத்த கனிமொழி எம்பி!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் தற்போது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் நேற்று திடீரென இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் தரப்படும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டார் 
 
இந்த அறிவிப்பு இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும்,ல் ஒட்டுமொத்த பெண்களின் வாக்குகள் இந்த ஒரே அறிவிப்பு காரணமாக கமல் கட்சிக்கு விழ வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் வழங்கப்படும் என்ற கமல்ஹாசனின் அறிவிப்புக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். தேர்தல் பிரச்சாரம் செய்யும் போது யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியம் அல்ல. திமுக தான் அடுத்து ஆட்சிக்கு வரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் ’பொங்கல் பரிசாக 2500 ரூபாய் கொடுத்து விட்டால் 10 ஆண்டுகளில் செய்த ஊழல்களை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைக்க வேண்டாம் என்றும், அது ஒருபோதும் நடைபெறாது என்றும் கனிமொழி தெரிவித்தர்
 
அதிமுக ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டார்கள் என்றும் கொரோனா காலத்தில் தமிழக அரசு செய்ய வேண்டிய மக்களுக்கான பல பணிகளை திமுக தான் செய்தது என்றும், மக்கள் நல உதவிகளை காணொளி மூலம் முடுக்கி விட்டவர் திமுக தலைவர் முக ஸ்டாலின் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
கமல்ஹாசனுக்கும் அதிமுகவுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் கனிமொழி பேசிய இந்த பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்