திடீரென வெடித்த சிலிண்டர் குடோன்; தீ பற்றிய வீடுகள்! – காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி!
வியாழன், 29 செப்டம்பர் 2022 (08:02 IST)
காஞ்சிபுரத்தில் சிலிண்டர் குடோனில் சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே சிலிண்டர் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இந்த குடோனில் திடீரென தீப்பற்றியுள்ளது. இதனால் அங்கிருந்த சிலிண்டர்கள் வெடித்ததால் தீ அக்கம்பக்கம் இருந்த வீடுகளுக்கும் பரவியுள்ளது.
உடனடியாக சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரவு நேரத்தில் திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.