நாட்டுக்காக உழைத்த தேச தலைவர்களை பாஜக தொடர்ந்து போற்றி மரியாதை செய்து வருகிறது. அந்த வகையில், கல்விக் கண் திறந்த காமராஜரின், 113ஆவது பிறந்த தின விழா, ஜூலை 15ஆம் தேதி, விருதுநகர் மற்றும் மதுரையில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். ஆனால், அன்றைய தினம், நிலம் கையகப்படுத்தும் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொள்ள இருப்பதால், அவர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.