இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினி தனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றும், தன்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது இந்த வேண்டுகோள் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது அவரது ஆதரவை நாடும் பிற கட்சிகளுக்கு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியின் ஆதரவு பெறுவது ஆரம்ப கட்டம் முதலே மக்கள் நீதி மய்யம் பேசி வருகிறது. இதுகுறித்து பேசியுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் “ரஜினியின் அறிக்கை குறித்து கருத்து எதுவும் சொல்வதற்கு இல்லை. அது அவரது முடிவு. ரஜினியிடம் ஆதரவு கேட்கும்போது உங்களுக்கு தெரியாமல் கேட்க மாட்டேன்” என கூறியுள்ளார்.