ஆட்கொல்லி புலிக்கு பாசம் காட்டும் கமல்: நெட்டிசன்கள் கலாய்!

ஞாயிறு, 3 அக்டோபர் 2021 (09:23 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புலியை சுட்டு கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
நீலகிரி மாவட்டம் தேவன் எஸ்டேட் பகுதியில் காட்டுப்புலி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். முன்னதாக இந்த புலி கூலி வேலை பார்க்கும் நபர் ஒருவரை தாக்கி கொன்றது. இதனால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். 
 
இந்நிலையில் ஏற்கனவே ஒரு பசுமாட்டை கொன்ற புலி தற்போது மீண்டும் ஒரு மாட்டை கொன்றுள்ளது. இந்நிலையில் ஊருக்குள் புலி அட்டகாசம் செய்து வருவதால் அதை பிடிக்க வனத்துறை தீவிரமாக இறங்கியுள்ளது. இதனால் புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 
ஆனால் கடந்த ஒரு வாரமாகவே புலி சிக்காமல் போக்கு காட்டி வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த ஆட்கொல்லி புலி தேவன் எஸ்டேட் பகுதியிலிருந்து மசினகுடி பகுதிக்கு நகர்ந்ததாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆட்கொலி புலி மசினகுடி அருகே கால்நடை மேய்துக்கொண்டிருந்த பசுவன் என்பவரை அடித்து கொன்றது. 
 
இதனைதொடர்ந்து புலியை சுட்டு பிடிக்க கோரி பொதுமக்கள் மசினகுடி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் . பின்னர் புலியை சுட்டு பிடிக்க உத்தரவு ஆணையை காண்பித்த பிறகு மக்கள் கலைந்து சென்றனர். இதனிடையே கமல் புலியை சுட்டுகொல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, மக்களின் உயிர் முக்கியம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் புலியைக் கொல்வது தீர்வு அல்ல. கூடலூர் பகுதியில் சுற்றித்திரியும் T-23 புலியை அதிநவீன தொழில்நுட்ப உதவியுடன் பிடித்து மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையைக் கேட்டுக்கொள்கிறேன்.
 
இந்த பதிவை பார்த்த இணையவாசிகள், நீங்க புலிக்கிட்ட பேச்சு வார்த்தை நடத்தி புரிய வையுங்க ஆண்டவரே எனவும் புலி மீது எவ்வளவு பாசம் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்