ஜெயலலிதா இருக்கும் போது நான் ஏன் குறிவைக்கப்பட்டேன்?: மனம் திறக்கும் கமல்ஹாசன்!

சனி, 29 ஜூலை 2017 (17:01 IST)
நடிகர் கமல்ஹாசன் சமீப காலமாக தமிழக அரசியலில் அதிகமாக பேசப்படுகிறார், அதிகமாக பேசவும் செய்கிறார். தமிழக அரசு குறித்த அவரது விமர்சனங்களும் எதிர்வினைகளும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
கமல்ஹாசனின் இந்த எழுச்சியை அடுத்து அவர் அரசியலுக்கு வர இருக்கிறாரோ என்ற கேள்வியும் சேர்ந்தே எழுந்தது. இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
 
கேள்வி கேட்டு திணறடிக்கும் அந்த செய்தியாசிரியர் கமல்ஹாசனை பேட்டி கண்டுள்ளார். அப்போது நடிகர் கமல்ஹாசன் ஒருசில விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது கமலின் விஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.
 
இந்த சிக்கலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் தான் காரணமாக கூறப்பட்டாலும் அதன் பின்னணியில் அதிமுக தான் இருந்ததாக அப்போதே கூறப்பட்டது. இந்நிலையில் முதன் முறையாக நடிகர் கமல் தான் ஜெயலலிதா இருந்த போதே குறிவைக்கப்பட்டதாக மனம் திறந்து பேசியுள்ளார்.
 
இது குறித்து பேசிய அவர், எனது விமர்சனம் பொதுவானது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோதே தனிப்பட்ட முறையில் நான் குறிவைக்கப்பட்டேன். ஆனால் அது ஏன் என்பது தான் இதுவரை தெரியவில்லை என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்