விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு: கமல் காட்டம்

ஞாயிறு, 25 மார்ச் 2018 (21:21 IST)
தமிழக அரசை விமர்சனம் செய்யும் செய்தி சேனல்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் பேட்டிகளை ஒளிபரப்பும் செய்தித் தொலைக்காட்சிகளை அரசு கேபிளில் இருந்து நீக்கும் நடவடிக்கையை தமிழக அரசு கையாண்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.. ஒருசில செய்தி தொலைக்காட்சிகள் மிரட்டலுக்கு பயந்து எடப்பாடி நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில், 'விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு சரித்திரத்திலும் ஏன், நினைவிலும்கூட நிலைக்க வாய்ப்பில்லை. இன்றைய அரசியலின் இந்த இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் இலட்சியங்களில் ஒன்று' என்று கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் இந்த குற்றச்சாட்டுக்கும் வழக்கம் போல் ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் பதிவாகி வருகிறது. கமல் கட்சியின் தொடக்கவிழாவின் போது ஒரு செய்தி சேனலும் நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை என்பதன் தாக்கமாகவும் இந்த டுவீட்டை எடுத்து கொள்ள வேண்டியதாக உள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு சரித்திரத்திலும் ஏன், நினைவிலும்கூட நிலைக்க வாய்ப்பில்லை. இன்றைய அரசியலின் இந்த இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் இலட்சியங்களில் ஒன்று https://t.co/fTfY6YmyYJ

— Kamal Haasan (@ikamalhaasan) March 25, 2018

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்