கடந்த 1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ராஜீவ் காந்தி வெற்றி பெற்று பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து அந்த தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து பிவி நரசிம்மராவ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பிரதமராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது பிவி நரசிம்மராவ் அவர்களின் 100வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: வடக்கிலேயே மையம் கொண்டிருந்த இந்தியத் தலைமை, 1991ல்தான் தெற்குக்கு வழிவிட்டது. பி.வி.நரசிம்மராவ் பிரதமரானார். இந்தியப் பொருளாதார மறுமலர்ச்சியின் தந்தை என்று பெயர் பெற்றவரின் நூற்றாண்டு நிறைவில் அவரை நினைவுகூர்வோம்.