முதல்கட்டமாக மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற தென் மாவட்டங்களிலும் இரண்டாம் கட்டமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அவர் பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிறு முதல் அவர் மூன்றாம் கட்ட பிரச்சாரமாக திருச்சியில் செய்து வருகிறார் என்பதும் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கமல்ஹாசனின் பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
பிரச்சாரத்தில் ஈடுபடுவது மட்டுமன்றி அவ்வப்போது அவர் தனது டுவிட்டரிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக ஊழலுக்கு எதிராகவும் அவர் ஆவேசமாக கருத்துக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் ஊழல் கதவுகளை பாடி திறக்க முடியாது என்றும், உதைத்து தான் திறக்க வேண்டும் என்றும் பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது