தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதல்வர் கண்களுக்கு கமிஷனும், கலெக்சனும மட்டுமே தெரிகிறது. அதனால் எங்கள் தலைவர் சென்னை மேயராக, உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதல்வராக சென்னை மாநகரத்திற்கும், தமிழகத்திற்கும் ஆற்றிய சாதனைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
திமுக தமிழ்நாட்டுக்கு என்ன செய்தது என்று கேள்வி எழுப்பியிருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக வரலாறும் தெரியாது. திமுக சாதனைகளும் புரியாது. எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளைத் தனியாக ஒரு அறையில் இருந்து படித்துப் பாருங்கள். அப்போது, தெரியும் அண்ணாவும், கருணாநிதியும் இந்த மாநிலத்துக்கு என்ன சாதனை செய்தார்கள் என்று.
ஊழல் மலை மீது அமர்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் திமுக பற்றியோ, எங்கள் தலைவர் பற்றியோ விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது? முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே சாதனைகளைச் சொல்ல முடியாமல் திணறியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தடுத்த கூட்டங்களிலும் திக்குமுக்காடப் போகிறார் என்பது நிச்சயம் என தெரிவித்துள்ளது.