சசிகலா ’சொத்துக் குவிப்பு வழக்கு’ குறித்து கமல்ஹாசன் அதிரடி கருத்து
திங்கள், 13 பிப்ரவரி 2017 (23:51 IST)
கடந்த சில தினங்களாக சமீபமாக அரசியல் விஷயங்களில் ஆர்வமாக கருத்து கூறி வருகிறார் கமல். மற்ற எல்லோரையும் காட்டிலும் தற்போதைய தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்த விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.
தற்போதைய தமிழ்நாடு அரசியலை பொறுத்த வரை, முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் சசிகலா ஆகிய இருவருக்கும் இடையே உள்ள மோதல்தான் எல்லோராலும் கவனிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அவர், ஓ.பி.எஸ்-ற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருந்தார்.
அவரை மாற்ற வேண்டிய அவசியம் ஏதுவுமில்லை மேலும், சசிகலாவை முதல்வராக்குவதில் எனக்கு உடன்பாடில்லை என பகீரங்கமாக கருத்து தெரிவித்தார். இந்நிலையில், சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ‘‘நீதியில் நியாயமும் கலந்திருத்தல் வேண்டும். தீர்ப்பு வேறு தீர்வு வேறு. நாளை மற்றொரு நாளே. பொருத்தாரே பூமியாள்வர்’’ என்று கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.