ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து செயல்படுவது சாத்தியமா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இப்படி குழப்பமான சூழல் இருக்கும் நிலையில் அதிமுக எம்எல்ஏ கடம்பூர் ராஜூ, ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டை கோர்ட்டு முடிவு செய்து விட முடியாது. அரசியல் கட்சியை பொறுத்தவரை கட்சியை வழி நடத்துவது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தான். ஒற்றை தலைமை கொள்கையில் அதிமுகவினர் கருத்தில் மாற்றமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.