கபாலி படத்தின் 2 நிமிட காட்சி : ரஜினியுடன் படம் பார்த்தவரே வெளியிட்டார்

வியாழன், 21 ஜூலை 2016 (11:02 IST)
ரஜினிகாந்த் நடித்து நாளை வெளியாகவுள்ள கபாலி படத்தில், ரஜினி அறிமுகமாகும் 2 நிமிட காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.


 

 
கபாலி படம் நாளை உலகமெங்கும் 5000க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகிறது. பொதுவாக புதிய படங்களை சில இணையதளங்கள், அந்த படம் வெளியான அன்றே கூட வெளியிடுகின்றன. அதுபோல், கபாலி படம் இணையத்தில் வெளியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இதைத் தொடர்ந்து, 200 க்கும் அதிகமான இணையதளங்கள் முடக்கப்பட்டன. இந்நிலையில், கபாலி படத்தில் ரஜினி அறிமுகமாகும் 2 நிமிட காட்சி இணையதளங்களில் வெளியானது. 
 
வயதான வேடத்தில் சிறையில் இருக்கும் ரஜினி விடுதலையாகும் காட்சி அது. சிறையில் நடந்து செல்லும் ரஜினி, அவரின் பொருட்களை எடுத்துக் கொண்டு, சிறையில் இருந்து வெளியே வருகிறார். அப்போது அவரின் ஆள் அவரிடம் பேசிக் கொண்டே வருகிறார். 
 
விசாரணையில், அமெரிக்காவில் உள்ள ரஜினிக்கு கபாலி படத்தின் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தனது மகள்களுடன் அந்த படத்தை பார்த்து ரசித்துள்ளார் ரஜினி. அப்போது, அந்த காட்சியை ஏற்பாடு செய்தவருக்கு தெரிந்த நபர்தான் இந்த செயலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. 
 
அவரிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஆனால், அவரை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. இதுபோன்ற வீடியோக்கள் வெளியிடுவது அமெரிக்காவில் கடுமையான குற்றமாகும். எனவே அவருக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில், இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் முடக்கப்பட்டிருக்கிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்