நீட் தேர்வு பிரச்சனை: அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு

செவ்வாய், 29 ஜூன் 2021 (22:01 IST)
தமிழகத்தில் நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்பது குறித்த குழப்பம் கடந்த சில நாட்களாக மாணவர் மத்தியில் நீடித்து வருகிறது
 
மத்திய அரசு நீட் தேர்வு கட்டாயம் உண்டு என்று அறிவித்துள்ள நிலையில் மாநில அரசு நீட்தேர்வு இல்லை என்பது போன்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது. நீட்தேர்வு தாக்கம் குறித்த குழு ஒன்று அமைக்கப்பட்டு அந்த குழு ஆய்வு செய்து வரும் நிலையில் விரைவில் நீட்தேர்வு ரத்தாகும் என முதல்வர் உட்பட அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் நீட் தேர்வு தொடர்பாக திராவிடர் கழகம் சார்பாக ஜூலை 1ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை திராவிட கழகத் தலைவர் வீரமணி அவர்கள் விடுத்துள்ளார்.
 
தமிழகத்தில் பாஜகவை தவிர அனைத்து கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது என்றும் நீட் தேர்வை எதிர்கொள்ளும் சமூக நீதியில் அக்கறை கொண்ட கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்ற ஆலோசனை கூறலாம் என்றும் கி வீரமணி தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்