எடப்பாடி அணி இப்போதுதான் விழித்துள்ளது - கே.பி.முனுசாமி பேட்டி

வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (17:12 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று தினகரனுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
அதிமுக துணைப் பொதுச்செயலாளராக தினகரனை நியமித்தது சட்ட விரோதம் எனவும், அவர் சமீபத்தில் நியமித்த நியமணங்கள் எதுவும் செல்லாது எனவும் எடப்பாடி அணி இன்று தீர்மானம் நிறைவேற்றியது. 
 
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள கே.பி.முனுசாமி “எடப்பாடி அணி தற்போதுதான் விழித்துள்ளது. தினகரன் மற்றும் சசிகலா குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கட்சியிலிருந்து நீக்க வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என 2 முக்கிய கோரிக்கைகளை வைத்திருந்தோம். அதை நிறைவேற்றினால் மட்டுமே அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். தற்போது தினகரனை மட்டுமே நீக்கியுள்ளனர். சசிகலாவையும் நிக்க வேண்டும்” என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்