விஐபிக்களை கடவுள் மன்னிக்க மாட்டார்: நீதிபதி வேதனை!

புதன், 23 மார்ச் 2022 (18:51 IST)
கோவில்களில் விஐபி தரிசனம் செய்பவர்களை கடவுள் மன்னிக்க மாட்டார் என நீதிபதி வேதனையுடன் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விஐபி தரிசன முறையால் சாதாரண மக்கள் சிரமத்துக்கு உள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் வேதனை தெரிவித்துள்ளார் 
 
கோவில்களில் கடவுள்  மட்டுமே விஐபி என்றும், வழிபடும் பக்தர்களுக்கு இடையூறு செய்யும் விஐபிக்களை கடவுள் மன்னிக்க மாட்டார் என்றும் பக்தர்களை தகாத வார்த்தைகளால் பேசும் கோவில் ஊழியர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறை வருவாய்த்துறை இந்து அறநிலைத்துறையினர்களுக்கு சிறப்பு தரிசனம் பெற அனுமதிக்க கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்