ஒரு மணி நேரத்தில் ஏழுமலையான் தரிசனம்: ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு!

திங்கள், 14 மார்ச் 2022 (18:48 IST)
ஒரு மணி நேரத்தில் திருப்பதி திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஐஆர்சிடிசி இணையதளத்தில் 999 ரூபாய் டிக்கெட் வாங்கிய பக்தர்களை திருப்பதி ரயில் நிலையத்தில் இருந்து வேன் மூலம் திருமலை அழைத்து செல்லப்படுவார்கள் என்றும் அங்கு அவர்களுக்கு ஒரு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அதன்பிறகு லட்டு பிரசாதம் வாங்கி தந்த பின்னர் மீண்டும் திருப்பதி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஐஆர்சிடிசி உடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் இந்த அரிய வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்