நீட் வழக்கில் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா? சிபிசிஐடிக்கு, நீதிபதி சரமாரி கேள்வி..!

Mahendran

வியாழன், 25 ஜூலை 2024 (17:34 IST)
2019ம் ஆண்டு நீட் தேர்வில் நடைபெற்ற ஆள் மாறாட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் தேசிய தேர்வு முகமையிடம், நீதிபதி புகழேந்தி சரமாரி கேள்வி எழுப்பினார். 
 
சிசிடிவி கேமிரா பதிவுகள் இல்லை,  விண்ணப்பங்கள் இதுவரை வழங்கப்படவில்லை, இந்தாண்டும் நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. தேசிய தேர்வு முகமை வழங்கிய ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை அறிக்கையை சிபிசிஐடி தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றால் வழக்கை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற நேரிடும் என சிபிசிஐடிக்கு, நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
 
மேலும் இந்த வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா? என்ற நீதிபதி கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை.
 
முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், கல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் நீதிபதி இன்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்