எனக்கு இந்தி தெரியாது: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Mahendran

புதன், 24 ஜனவரி 2024 (09:59 IST)
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் எனக்கு ஹிந்தி தெரியாது என்றும் எனவே குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் இந்தியில் மாற்றப்பட்டாலும் நான் ஆங்கிலத்தில்தான் குறிப்பிடுவேன் என்றும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மத்திய அரசு தற்போது ஐபிசி, சிஆர்பிசி, ஐ.இ.ஏ ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர்களை ஹிந்தியில் மாற்ற திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
ஐபிசி, சிஆர்பிசி, ஐ.இ.ஏ  ஆகிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் ஹிந்தியில் மாற்றப்பட்டாலும் நான் ஐபிசி என்று தான் குறிப்பிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். ஏனெனில் எனக்கு இந்தி தெரியாது என்றும் அதனால் ஹிந்தியில் உள்ள புதிய பெயர்களை என்னால் சரியாக உச்சரிப்பது கடினம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்