நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: ஜெகத்ரட்சகன் விளக்கம்!

புதன், 20 ஜனவரி 2021 (10:53 IST)
புதுவையில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்றும் அவ்வாறு வெற்றி பெறவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்ள தயார் என்றும் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அவர்கள் நேற்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
நேற்று திமுக நிர்வாகிகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் காரைக்காலில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய ஜெகத்ரட்சகன் புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என்றும் அவ்வாறு வெற்றி பெறவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறியிருந்தார் 
 
புதுவையில் தற்போது திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என திமுக பிரமுகர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் இதுகுறித்து ஜெகத்ரட்சகன் விளக்கமளித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் 30 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று நான் கூறியதும் எங்களுடைய கூட்டணியை தான் என்றும், திமுக தனியாக வெல்லும் என்று நான் கூறவில்லை என்றும், கூட்டணி தான் வெல்லும் என்று கூறினேன் என்றும் விளக்கம் அளித்துள்ளார் 
 
ஏற்கனவே திமுக காங்கிரஸ் கூட்டணி ஆக இருக்கும் நிலையில் இந்த கூட்டணியே மேலும் தொடரும் என்றும் மீண்டும் இதே கூட்டணி ஆட்சி புதுவையில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்