முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்துவிட்டார், அவர் எப்பொழுது வீடு திரும்புவார் என்பதை அவரே முடிவு செய்வார் என மருத்துவமனை தரப்பு கூறிவிட்டது. இதனையடுத்து ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் தேதி குறித்து அவரது தோழி சசிகலா ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனையில் உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
அதில் ஜெயலலிதாவின் ஜாதகப்படி வரும் டிசம்பர் 5-ஆம் தேதி வரை அவருக்கு நேரம் சரியில்லையாம். அதனால் அவரை டிஸ்சார்ஜ் செய்வதாக இருந்தால் அதை டிசம்பர் 5-ஆம் தேதிக்கு பின்னர் வைத்துக்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார். மேலும் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு பின்னர் ஜெயலலிதா அடுத்த ஒரு வருடம் அமோகமாக இருப்பார் எனவும் கூறியுள்ளார்.