முதல்வர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் புதிய வழித்தடத்துக்கு அடிக்கல் நாட்டினார்!

சனி, 23 ஜூலை 2016 (12:10 IST)
சென்னை வண்ணாரப்பேட்டை முதல் லிம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரயிலின் புதிய வழித்தடத்துக்கான பணிகளை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.


 
 
வண்ணாரப்பேட்டை முதல் லிம்கோ நகர் வரை அமைய உள்ள இந்த புதிய வழித்தடத்தில் 8 புதிய ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 3770 கோடி ஆகும்.
 
இன்று நடந்த இந்த விழாவுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். குத்து விழக்கை ஏற்றி வைத்து மெட்ரோ ரயில் சிறப்பு மலரையும் வெளியிட்டார் அவர். இதனை தொழில்துறை அமைச்சர் சம்பத் பெற்றுக் கொண்டார்.
 
பின்னர் விழாவில் பேசிய அவர், மெட்ரோ ரயில் விரிவாக்க பணி மேற்கொள்வதால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மெட்ரோ ரயில்  திட்ட விரிவாக்கத்திற்காக இதுவரை மத்திய அரசு 10 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
 
இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஜெயலலிதா பின்னர் உரையாற்றினார். இந்த திட்டத்திற்கு விரைந்து அனுமதி வாங்கி தந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்