மகிழ்ச்சி... இது ஜெயலலிதா ஸ்டைல்!

புதன், 27 ஜூலை 2016 (10:40 IST)
தமாகாவின் மாநில துணைத்தலைவராக பொறுப்பு வகித்த ஞானசேகரனை அந்த பொறுப்பிலிருந்து ஜி.கே.வாசன் நீக்கினார். இந்நிலையில் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார் ஞானசேகரன்.


 
 
அதிமுகவில் சேர்ந்த பின்னர், அது குறித்து கூறிய ஞானசேகரன், முதலமைச்சர் ஜெயலலிதா எங்களை பார்த்தவுடன் சொன்ன முதல் வார்த்தை மகிழ்ச்சி என்பது தான் என்றார்.
 
அதிமுகவில் உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என முதல்வர் கூறியதால் என்னுடன் வந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். மேலும் கிடைத்த கேப்பில் ஜி.கே.வாசனையும் அவர் கலாய்த்து விட்டு சென்றார். ஆளே இல்லாத டீக் கடையில், யாருக்கு டீ ஆத்திக் கொண்டிருக்கிறார் ஜி.கே.வாசன் என்று தெரியவில்லை என அவர் கூறினார்.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்